வைரலாகும் வீடியோ: சச்சினின் இன்னொரு முகத்தை பார்த்து திகைத்து நின்ற ரசிகர்கள்!

வீட்டிலியே வைத்து பரமாரித்து அதன் உடல் நலத்தை சரிசெய்து கடைசியாக அதை கூண்டில் வைத்து அடைக்காமல் சுதந்திரமாக பறக்க விடுகிறார்.

கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் தனது ஃபேஸ்புக்கில் வெளிட்டிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் பிரபலம் சச்சின் டெண்டுல்கர்.இவர் சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் சச்சினின் வாலோவர்ஸ் அவரை விடாமல் துரத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சச்சின் சமீபத்தில் தனது வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் ஒதுங்கிய பறவைக்கு வைத்தியம் பார்த்து 3நாட்களில் பறவையை சரிசெய்து குணமடைய வைக்கும் வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து சச்சினை மனதார பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவில் பறவை ஒன்று நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சச்சின் வீட்டின் பால்கனியில் தரை ஒதுங்கியது. இதைப் பார்த்த சச்சின் உடனே, அந்த பறவைக்கு சிறிதளவு உணவு கொடுத்து, பின்பு மும்பையில் இருக்கும் தன்னார்வு தொண்டு நிறுவன குழுவை சேர்ந்தவர்களை வீட்டுக்கு அழைத்து பறவையின் உடல் நலம் குறித்து விவரமாக தெரிந்துக் கொள்கிறார். பின்பு, தொடர்ந்து 3 நாட்கள் அந்த பறவையை வீட்டிலியே வைத்து பரமாரித்து அதன் உடல் நலத்தை சரிசெய்து கடைசியாக அதை கூண்டில் வைத்து அடைக்காமல் சுதந்திரமாக பறக்க விடுகிறார். இந்த வீடியோவை இதுவரை மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும், சச்சினை வெகுளவில் பாராட்டியும் வருகின்றன. இந்த வீடியோவை நீங்களும் பார்க்கலாமே..

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close