Video shared by Gujarat officials claiming Gir lions are safe after Cyclone Tauktae is fake : இந்த வாரத்தின் துவக்கத்தில் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ்தே புயல் குஜராத் அருகே கரையைக் கடந்தது. பெரும் சேதாரத்தை ஏற்படுத்திய இந்த புயலால் கிர் சிங்கங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அம்மாநில வனத்துறையினர் அறிக்கையும் சில புகைப்படங்களும் வெளியிட்டிருந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு சிங்கங்கள் பல வனத்தின் நடுவே பாதுகாப்பாக செல்லும் வீடியோவும் வெளியிடப்பட்டிருந்தது.
மாநில அமைச்சர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய அதிகாரிகளும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய முற்படாமல் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். உண்மையில் அந்த வீடியோவை கிர் காடுகளுடன் ஒப்பிட்டால் உண்மை நிலவரம் என்ன என்று தெரிந்திருக்கும். காடுகளின் தன்மை இரண்டிலும் வேறானவை. வறண்ட, மழைக்காலத்தின் போது மட்டுமே துளிர்க்கும் காடானது கிர். ஆனால் வீடியோவில் இருப்பது பசுமையான காடுகள்.
மேலும் படிக்க : என்னைய பாத்த உங்களுக்கு வெளையாட்டா இருக்கா? ஜே.சி.பி.யிடம் சண்டைக்கு செல்லும் யானை
வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் ஆப்பிரிக்காவில் உள்ள மலாமலா பாதுகாக்கப்பட்ட வனத்தில் சஃபாரி சென்ற போது எடுத்த வீடியோ. இதனை அந்த வனப்பகுதியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிப்ரவரி மாதத்தில் பதிவேற்றியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil