’ஓ மை காட் டேடி’... ஷிகார் தவானை பார்த்து கத்திய அவரது மகள்!

இளைய மகள் தனது தந்தையைக் கண்டு சந்தோஷத்தில்,, “ஓ மை காட்.., ஓ மை காட்..னு கத்தும் வீடியோ பார்ப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகார் தவான், ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த போது,  அவரது மகள் அவரைப் பார்த்து  ஆச்சரியத்தில் கத்தும் வீடியோ ஒன்று இந்த வாரம் ட்விட்டர் ட்ரெண்டிங்  இடம் பிடித்துள்ளது.

இன்றைய உலகில்  பணிச்சுமை காரணமாக பலர், தங்களின் குடும்பங்களை விட்டு தள்ளி இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.  அது நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி,  பிரபலங்களாக இருந்தாலும் சரி. குடும்பம் என்று வந்து விட்டால் எல்லாருமே சரிசமம் தான்.

சினிமா பிரபலங்கள்,  கிரிக்கெட் வீரர்கள்,  வெளிநாடுகளில்  தங்கி பணிப்புரிபவர்கள் என எல்லாரும் பல்வேறு காரணங்களால் குடும்பங்களை விட்டு தள்ளி  இருந்து வருகின்றன. அந்த வகையில்,  இந்திய கிரிக்கெட் அணியின்  தொடக்க வீரரான  ஷிகார் தவான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர். இதனால் தனது குடும்பத்தினருடன் மிக குறைந்த நேரத்தையே அவரால் செலவிட முடிகிறது.

இந்த தனிமையை போக்கும் வகையில், சென்ற வாரம் அவர் திடீரென்று அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை  பார்க்க ஆஸ்திரேலியா  புறப்பட்டு சென்றார். ஆனால்,  15 மணி நேர  பயனத்திற்கு பிறகு அவர், தனது மகன் மற்றும் மகள்களை சந்தித்ததை ஒரு வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த  வீடியோவில்,  தவான், தனது 5 வயது மகனின் பள்ளிக்கு சர்ப்ரைஸாக சென்று  அவனை சந்தோஷப்படுத்தினார். அதன் பின்பு, தனது மகள்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் ஒளிந்துக் கொண்டு அவர்கள் வரும் நேரத்தில் எதிரில் தோன்றி அவர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்தார்.  குறிப்பாக  தவானின் இளைய மகள் தனது தந்தையைக் கண்டு சந்தோஷத்தில்,, “ஓ மை காட்.., ஓ மை காட்..னு கத்தும் வீடியோ பார்ப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

தவான் பதிவிட்டிடுருந்த அந்த வீடியோவை பார்த்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும்  தங்களில் குடும்பங்களை மிஸ் செய்வதாக கூறியிருந்தனர். இதுவரை இந்த வீடியோவை எழுபது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

தவான் பதிவிட்ட இந்த வீடியோ இந்த வார ட்விட்டர் ட்ரெண்டிங் வீடியோ லிஸ்டிலும் இடம் பெற்றுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close