வீடியோ: இதெப்படி சாத்தியம்! கணக்கு கேள்விகளுக்கு குரைத்து பதில் சொல்லும் புத்திசாலி நாய்க்குட்டி!

எண்களை அட்டையில் எழுதி காண்பிக்க ஒவ்வொரு எண்ணுக்கும் ஏற்றவாறு, அத்தனை முறை குரைத்து சரியான விடையை சொல்கிறது இந்த நாய்க்குட்டி.

By: March 4, 2018, 6:10:06 PM

பெரும்பாலான நாய்கள் மிகவும் புத்திசாலியானதாக இருக்கும். தங்கள் எஜமானர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்யும். அதனை செய்வதற்கு அந்நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால், இங்கே ஒரு நாய்க்குட்டி கணிதத்தில் படு சுட்டியாக இருக்கிறது. தன்னுடைய எஜமானர் ஒன்று, இரண்டு, மூன்று என எண்களை அட்டையில் எழுதி காண்பிக்க ஒவ்வொரு எண்ணுக்கும் ஏற்றவாறு, அத்தனை முறை குரைத்து சரியான விடையை சொல்கிறது இந்த நாய்க்குட்டி.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எண்கள் மட்டுமல்ல, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், ஸ்கொயர் ரூட் என எல்ல கணித கேள்விகளுக்கும் குரைத்தே பதில் சொல்கிறது இந்த நாய்க்குட்டி.

இந்த அதிபுத்திசாலியின் நாய்க்குட்டியின் கணிதத் திறனை பார்த்து நீங்களும் அதிசயிங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Video this dog is really good with numbers he even solves math equations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X