சாலையில் நின்றுக் கொண்டிருந்தது பெண் பேய்யா? திகில் கிளப்பும் வீடியோ!

இரவு நேரத்தில் பதிவான இந்த காட்சிகள் கடந்த ஆண்டு பலரின் கவனத்தியும் பெற்றிருந்தனர்.

சிங்கப்பூரில்  சாலையின் ஓரத்தில்,  மர்மமான உருவம் ஒன்று நின்றுக் கொண்டிருக்கும் திகில் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

பேய் என்று சொன்ன உடனே, எல்லாருக்கும் ஏற்படும் ஒரு  நடுக்கம் தான் பயமாக பார்க்கப்படுகிறக்து.   பொதுவாக, இணையதளங்களில் அடிக்கடி பேய் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் அடிக்கடி இடம்பெறுவது உண்டு. அப்படி வெளிவரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்  நம்பக்கதன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

பலர் பொய்யான வீடியோக்கள் அல்லது ஃபோட்டோஷாப் செய்த புகைப்படங்களை  உண்மை போலவே, பகிர்ந்து எல்லோரிடமும்  ஒரு  கவனத்தை பெற விரும்புவர். அதே சமயத்தில், பல உண்மையான வீடியோக்களும்  வெளிவந்துள்ளனர்.அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பேய் வீடியோ ஒன்று உலகளவில் வைரலானது.

வெளிநாட்டில் உள்ள பள்ளி ஒன்றின் சிசிடிவி காமிராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகள் பலரையும் பயத்தில் உறைய வைத்தது.  அமைதியாக இருக்கும் அந்த பள்ளியின் இரவு நேரத்தில் பதிவான இந்த காட்சிகள் கடந்த ஆண்டு பலரின் கவனத்தியும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் வெளியாகி இருக்கும் வீடியோ இணையத்திஉல் அனைவரின் கவனைத்தியும் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பிரதான சாலையில் இரவு நேரத்தில் கார் ஒன்றுச் சென்றுக்கொண்டிருக்கிறது. அப்போது, திடீரென்று,  சாலையின் ஓரத்தில் இருக்கும் ப்ளாட்ஃபார்ஃபில்  பெண் போன்று காட்சியளிக்கும் மர்மான உருவம் ஒன்று கண்ணில் தென்படுகிறது. சிறிது நேரத்திற்குள் அந்த உருவம் காணாமல் போய் விடுகிறது.

சாலையின் ஒரத்தில் காட்சியளித்த பெண் உருவம் பேய்யாக இருக்கக்கூடும் என்று பலரும்  கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த வீடியோவை  ஆராய்ந்த பல தனியார் நிறுவனங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும்  காட்சிகள் உண்மை என்றும் இதில் எந்த தொழில் நுட்பமும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Did anyone else saw the long hair, long skirt 'Ghost' along Upper Bukit Timah Road, just before Rail Mall on Saturday night 3/3/18.Credit: Jeremy L. …… Come to think of it, it must be someone standing on the high cement divider. Scare the shit out of drivers.

Posted by ROADS.sg on 6 मार्च 2018

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close