பெற்றால் இந்த மாதிரி பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும்: நீங்களே பாருங்கள்!!!

தட்டில் போட்ட சாப்பாட்டை முழுசா ஊட்டி முடிக்காமல் அந்த சிறுமி அங்கிருந்து நகரவேயில்லை

தட்டில் போட்ட சாப்பாட்டை முழுசா ஊட்டி முடிக்காமல் அந்த சிறுமி அங்கிருந்து நகரவேயில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெற்றால்  இந்த மாதிரி பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும்:  நீங்களே பாருங்கள்!!!

கேராளவில்  பெண் குழந்தை  ஒன்று  தனது தந்தைக்கு சோறு ஊட்டும் வீடியோ ஒன்று, இணையவாசிகளின் இதயத்தில் நீங்க இடத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

பெண் பிள்ளையை, தகப்பன்மார்கள் அதிகமாக விரும்புவதற்கு பல காரணங்களை சொல்லலாம்.  பலரும் தங்களின் பெண் பிள்ளைகளை தங்கள் தாயின் நினைவாகவே பார்ப்பார்கள்.  அப்பா- அம்மாவுக்கு இடையில் சண்டை வந்தால் கூட  பெண் பிள்ளைகள்  அப்பாவிற்கு தான் சப்போர்ட் செய்வார்கள்.

அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றாலே தனி தீர்ப்பு. அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் பெண் பிள்ளைகள் செய்யும்  சுட்டியான வீடியோக்கள் பல வைரலாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் பெண் குழந்தை ஒன்று, தன் அப்பாவுக்கு  பெரிய மனிஷி போல்  சோறு ஊட்டுகிறது. அதுவும், திட்டிக் கொண்டே. “ காசு என்ன மரத்திலாயா காய்க்கிறது. சாப்பாடை  வீண் செய்ற, ஒழுங்கா சாப்பிடு” என்று மலையாள மொழியில் அந்த குழந்தை பேசும் வசனம் பலரையும் கவர்ந்துள்ளது.

Advertisment
Advertisements

ஒருகட்டத்தில்,  அவரின் அப்பாவே அவளிடம் இருந்து தப்பிக்க முடியாமல் திணறும் இடங்கள்  பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.   தட்டில் போட்ட  சாப்பாட்டை முழுசா ஊட்டி முடிக்காமல் அந்த சிறுமி அங்கிருந்து நகரவேயில்லை. நீங்களும் அந்த வீடியோ மிஸ் பண்ணாம பாத்திருங்க..

 

https://www.facebook.com/somangazal/videos/vb.100003661287344/1249352145196816/?type=2&video_source=user_video_tab

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: