வைரலாகும் வீடியோ: தனது தீவிர ரசிகைக்கு அரங்கத்திலேயே பதில் சொன்ன ஜாகீர் கான்!!!

சுமார் 12 வருடங்கள் கழித்து தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகபரவி வருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு,  நடந்த கிரிக்கெட் போட்டியில்  தனது தீவிர ரசிகை ஒருவருக்கு ஜாகீர் கான்  அரங்கத்திலியே தனது அன்பை  வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமுகவலைத்தளங்கள் எப்போதுமே பழைய  நினைவுகளை நமக்கு ஞாபகப்படுத்துவதில் அதிக பங்காற்றுகின்றனர்.   எப்போதோ,  எங்கையோ பதிவான நிகழ்ச்சிகள் கூடா திடீரென்று ஒருநாள் வைரலாகி விடும்.  அதை யார் எடுத்தார்கள், யார் பதிவு செய்தார்கள் என்று கண்டுப்பிடித்து அழிப்பதற்குள் அந்த வீடியோ அல்லது ஃபோட்டோவை உலகமே பார்த்து விடும்.

அதுமாதிரி, தற்போது ஒரு சம்பவம்  நடந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டி  அன்றைய தேசிய  ஊடகங்களில்  நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டன. அப்போது அரங்கத்திற்கு போட்டியைக் காண நேரில் வந்த பெண் ஒருவர், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் தீவிர ரசிகை ஆவர்.

அவர், தனது கையில் ”ஐ லவ் யூ ஜாகீர்” என்ற வசனம் அடங்கிய பலாகை ஒன்றை வைத்திருந்தார். அப்போது அரங்கத்தில் இருக்கும் பெரிய திரையில் அந்த பெண்ணின் புகைப்படம் ஒளிப்பரப்பானது.  அதைப்பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர்.

அந்த பெண்ணும் வெட்கத்தில் சிரித்தப்படியே கையில் வைத்திருந்த பலாகையை காட்டினார்.  இதை  அரங்கத்தில் இருந்த மற்ற கிரிக்கெட் வீரர்களும் பார்த்தனர். அப்போது, ட்ரெஸ்ஸிங் ரோமில் இருந்தப்படி போட்டியை பார்க்கும்  கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஜாகீர் கானை பயங்கரமாக கலாய்கிறார். அத்துடன், ஜாகீரை அந்த பென்ணிற்கு ஹாய் சொல்லும்படியும்  வற்புறுத்திகிறார்.

ஜாகீரும் சிரித்துக்  கொண்டே அந்த பெண்ணிற்கு ஹாய் சொல்கிறார். உற்சாகத்தில் அந்த பெண் ஜாகீருக்கு பறக்கும் முத்தம் (flying kiss)  கொடுக்கிறார். பதிலுக்கு ஜாகீர் என்ன செய்தார் என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இவை அனைத்துமே, நேரலையில் ஒளிப்பரப்பன. மறுநாள் அனைத்து பத்திரிக்கையிலும் ஜாகீர் மற்றும் அந்த பெண்ணின் புகைப்படங்கள் வெளிவந்தன.  இந்த வீடியோ  சுமார் 12 வருடங்கள் கழித்து தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகபரவி வருகிறது.

×Close
×Close