Advertisment

வைரல் வீடியோ : அற்புத திறமையால் தமிழ் இளைஞருக்கு வெளிநாட்டில் குவிந்த ரசிகர்கள்!!!

Viral Video : ஸ்காட்லேண்ட் நாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பாட்டுத்திறமையால் பல ரசிகர்களை குவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Boy Colet Selwyn : தமிழ் இளைஞர் கோலெட் செல்வைன்

Tamil Boy Colet Selwyn : தமிழ் இளைஞர் கோலெட் செல்வைன்

தமிழகத்தைச் சேர்ந்த கோலெட் செல்வைன் என்ற இளைஞர் தற்போது ஸ்காட்லேண்டில் வசித்து வருகிறார். அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பையோமெடிக்கல் இஞ்சினியரிங் படித்து வருகிறார்.

Advertisment

ஸ்காட்லாண்டில் உள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கோலெட் பாடிய பாடலை அங்கிருந்த அனைவரும் வியந்து ரசித்தனர். மெல்லிய உடல் கொண்ட இந்த இளைஞரிடம் இருந்து எழும் கனீர் குரலுக்கு அனைவரும் சொக்கிப்போயிருந்தனர்.

Tamil Boy Colet Selwyn இளைஞர் கோலெட் செல்வைன்

துரு துருவென காட்சியளிக்கும் இந்த இளைஞர் பாடிய பாடல் சரவெடிப்போல வெடித்தது. கோலெட்டின் பெற்றோர் இருவரும் மருத்துவர்களாக பெங்களூருவில் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் வெளியான தனது மகனின் வீடியோவிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து இருவரும் பெருமையடைந்துள்ளனர்.

கடல் கடந்து ஸ்காட்லேண்டில் வசிக்கும் இந்த இளைஞரின் பாடல் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Scotland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment