வைரலாகும் வீடியோ: ஐதராபாத் அணி வீரரிடம் ஷீகர் தவான் செய்த செயல்!!!

ஷீகர் தவானின் குறும்புக வர வர எல்லை தாண்டி போவதாக

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரரான ஷாகிப் அல் ஹசனிடம், அதே அணியைச் சேர்ந்த ஷீகர் தவான்  சிறு பிள்ளை போல் விளையாடி  வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தற்போது இணையத்தை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரு விஷயம் எதுவென்றால் அது ஐபிஎல்.  ஐபிஎல் போட்டிகள் நடைபெறு மாதம் என்பதால்  இந்த நேரத்தில் அதுக் குறித்த எந்த செய்தி வெளியானாலும் அது வைரலாக  மாறுகிறது. ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் வீரர்கள்  நின்னால் வைரல், நடந்தால்  வைரல்,   அவர்கள் குறித்த வீடியோ வெளியானால் அதுவும் வைரல் என்று எந்த பக்கம் திரும்பினாலுன் ஐபிஎல் பேச்சுத்தான்.

அந்த வகையில்,  நேற்றைய தினம், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ஷீகர் தவான்,  தனது அணியைச் சேர்ந்த  கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனிடம்  விமானத்தில் சிறுவர்கள் போல் டீஸ் செய்து விளையாடும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ஐதராபாத் அணி வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து, சண்டிகருக்கு விமானம் மூலம் பயணிக்கின்றனர். அப்போது ஷாகிப் அல் ஹசன் களைப்பில், தூக்குகிறார்.  அப்போது அவரையே அறியாமல் குறட்டை சத்தம் வந்துள்ளது. அப்போது அருகில் இருந்த  ஷீகர் தவான்,  ஷாகிப்பிற்கு அருகில் சென்று அவரின் மூக்கில்  காகிதத்தை விட்டு  வெறுப்பு ஏத்துகிறார்.

பதறி அடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து, எழுந்த ஷாகிப் , ஷீகர் தவானை பார்த்து சிரிக்கிறார்.  இந்த காட்சிகளை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஷீகர் தவானின் குறும்புக வர வர எல்லை தாண்டி போவதாக  அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close