Advertisment

ஆச்சர்ய வீடியோ: பெட்ரோலை ருசித்துக் குடிக்கும் குரங்கு! வாழைப்பழம் கொடுத்தால் சாப்பிடாதாம்!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள இன்சார் பசாரில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் குரங்கு ஒன்று, அதிலிருந்து பெட்ரோலை உறிஞ்சிக் குடிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
food habits, global warming, climate change, haryana,

காலநிலை மாற்றத்தால் மனிதர்கள் மட்டுமில்லை. விலங்குகள், பறவைகள் என பல உயிரினங்கள் பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். குறிப்பாக, உயிரினங்கள் தங்களுடைய உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வதால், அவை உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அண்டார்டிகாவில் உள்ள பெங்குயின்கள் தங்களின் பிரதான உணவு இல்லாமல் உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளது.

Advertisment

அதேபோல், லெமூர் குரங்கினங்களுக்கு காலநிலை மாற்றத்தால் அவற்றின்ம் பிரதான உணவான மூங்கிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பசியின் காரணமாக அவை பெருமளவில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிலக்கரியை சாப்பிடும் அளவுக்கு அவற்றின் உணவுப்பழக்கம் மோசமான நிலையை எட்டியுள்ளது.

இப்போது, ஹரியானாவில் குரங்கு ஒன்று, பைக்கில் இருந்து பெட்ரோலை குடிக்கும் வீடியோவை பார்த்தால், குரங்குகளும் காலநிலை மாற்றத்தால் உணவு பழக்கத்தை மாற்றிவிட்டதோ என்று உங்களுக்கு தோன்றும்.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள இன்சார் பசாரில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் குரங்கு ஒன்று, அதிலிருந்து பெட்ரோலை உறிஞ்சிக் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அக்குரங்குக்கு வாழைப்பழம் நட்ஸ்கள் உள்ளிட்டவற்றை அளித்தாலும் அவற்றை திண்ணாது எனவும், பெட்ரோலுக்கு அது அடிமையாகிவிட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment