Coimbatore News in Tamil: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, புள்ளி மான், காட்டுமாடு, கரு சிறுத்தை என இருவாச்சி மற்றும் பல விதமான பறவைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு நீர் தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
மேலும் வனப்பகுதிகளில் தீ தடுப்புக்கோடு அமைத்து காட்டுத்தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து வனப்பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் காட்டு யானை கூட்டங்கள் உடல் சூட்டை தணிக்க குளித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH || குட்டிகளுடன் குஷியாக ஆட்டம் போடும் காட்டுயானை கூட்டம் – வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #coimbatore | #elephant pic.twitter.com/HdM8oAvCwL
— Indian Express Tamil (@IeTamil) March 29, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil