மேற்கு வங்காளத்தில் நடைப்பெற்ற பாஜக கூட்டத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் ஒருவர் தனது ஆசையை கூற அடுத்த கணமே மோடி அதை நிறைவேற்றினார்.
மிட்னப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைப்பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கூட்டத்துக்காக போடப்பட்டிருந்த கூடாரத்தின் கம்பங்களில் ஏறிபிரதமரை பார்க்க பலர் முற்பட்டதால் திடீரென்று, கூடாரம் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தினால் கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. பிரதமர் மோடி போது, கூட்டத்தில் பேசும் போது கூடாரம் சரிந்து விழுந்தது.இதை கண்ட பிரதமர், பாதியிலேயே உரையை நிறுதினார். மக்களை, பாதுக்கப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தினார். “கூடாரத்தின் மேல் ஏறியவர்கள், இறங்கிவிடுங்கள்” என்று மைக்கிலும் தொடர்ந்து அறிவிப்புகளையும் கொடுத்தார்.
அதன் பின்பு, விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமரின் பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடியும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில்சென்று பார்வையிட்டார்.அப்போது சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களை மோடி தனித்தனியாக அருகில் சென்று நலம் விசாரித்தார்.
அப்போது, மோடி ஒரு பெண்ணிடம் சென்று உடல் நலம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்? அதற்கு அந்த பெண் மோடியிடம், “உங்களை இவ்வளவும் அருகில் பார்த்தது மிகவும் மகிச்சி. எனக்கு ஆட்டோகிராஃப் போட்டு தருவீர்களா? என்று கேட்டுள்ளார். நெகிழ்ச்சியில் மோடி, உடனே அருகில் இருந்த பேப்பரில் பேனாவை எடுத்து ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.இதன் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது