Advertisment

எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108-வது பிறந்தநாள்: புகைப்படங்களால் மரியாதை செலுத்திய வித்யா பாலன்: வீடியோ

வித்யா பாலன், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் இணைந்து எம்.எஸ். சுப்புலட்சுமியின் தோற்றத்தைப் போலவே மீண்டும் உருவாக்கினார்.

author-image
WebDesk
New Update
Vidyabalan MS Subbulakshmi

எம்.எஸ். சுப்புலட்சுமி அணிந்திருந்த நான்கு புடவைகளை அணிந்து வித்யா பாலன் புகைப்படம்: (Image source: @balanvidya/Instagram)

புகழ்பெற்ற பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை வித்யா பாலன் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு புகைப்படங்களால் இதயப்பூர்வமான மரியதை செலுத்தினார். இந்த மரியாதை செலுத்துவதற்காக, நடிகர், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் இணைந்து பாரத ரத்னா விருது பெற்றவரின் சில புகழ்பெற்ற தோற்றங்களை மீண்டும் உருவாக்கினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vidya Balan gives photographic tribute to M S Subbulakshmi on her 108th birth anniversary. Watch here

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், சுப்புலட்சுமி அணிந்திருந்த 4 புடவைகளை பாலன் அலங்கரித்துள்ளார். பாரம்பரியமான முறையில் குங்குமம், மூக்குத்தி, மல்லிகை மற்றும் கொண்டை, அணிகலன்கள் ஆகியவற்றைக் கொண்டு நடிகை வித்யா பாலன் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற தோற்றத்தை வடிவமைத்தார். “அவரது 108-வது பிறந்தநாளில், பண்டித ஜவஹர்லால் நேருவால் 'இசை ராணி' என்றும் சரோஜினி நாயுடுவின் நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா என்றும் பிரபலமாக குறிப்பிடப்படும் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி (எம்.எஸ். அம்மா) அவர்களுக்கு புகைப்பட அஞ்சலி செலுத்த முடிந்ததில் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.” என்று பாலன் இன்ஸ்டாகிராமில் எழுதினார்.

“அவரது மெல்லிய குரலின் வசீகரத்தைக் கூட்டி, எளிமையில் ஒரு ஆய்வாகத் தோற்றமளித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி - ஒரிஜினல் ஸ்டைல் பிம்பத்திற்கு, அனுபர்தசாரதியும் நானும் சேர்ந்து செய்த ஒரு பணிவான மரியாதை இது. இந்த அம்சம் எம்.எஸ். அம்மா அணிந்திருந்த 60 மற்றும் 80-களுக்கு இடையில் பிரபலமாக இருந்த நான்கு புடவைகளை காட்சிப்படுத்துகிறது. இது எம்.எஸ்.அம்மாவின் கச்சேரி ஆளுமையின் சித்தரிப்பு ஆகும். எம்.எஸ். அம்மாவின் தோற்றத்தில் செழுமையான, துடிப்பான மற்றும் தனித்துவமான புடவைகளுடன், நெற்றியில் பாரம்பரிய குங்குமம் மற்றும் விபூதி, மூக்கில் இருபுறமும் 2 தனித்துவமான மூக்குத்திகள், கொண்டை மற்றும் அலங்கரிக்கப்பட்ட மல்லிப்பூ, உள்ளிட்ட எளிய அணிகலன்கள்.” என்று நடிகை வித்யா பாலன் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேத்தியும் பிரபல புல்லாங்குழல் கலைஞருமான சிக்கில் மாலா சந்திரசேகர், புகழ்பெற்ற பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியி தோற்ரம் பற்றிய நுட்பங்களை அளித்து தனக்கு உதவியதற்காக பாலன் நன்றி தெரிவித்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் தோற்றத்தில் நடிகை வித்யா பாலன் வீடியோ பாருங்கள்:

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா மற்றும் ராமன் மகசேசே விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார். அவரது தாயார் சண்முகவடிவுவின் சீடரான இவர், தனது 10 வயதில் கர்நாடக இசைக்கான பயிற்சியைத் தொடங்கினார். இவர் 1966-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்ற முதல் இந்திய இசைக்கலைஞரும் ஆவார். 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் காலமானார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vidya Balan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment