Advertisment

தளபதியிடமே மேஜிக் செய்து காட்டிய ரசிகர்; அசந்துபோன விஜய் பாராட்டு

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர் ஒருவர் விஜய்யிடம் மேஜிக் செய்து காட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor vijay, vijay, vijay bigil, vijay thalapathy 64, master first look poster, விஜய், மாஸ்டர், தளபதி 64, Vijay fan show magic, விஜய்க்கு மேஜிக் காட்டிய ரசிகர், fan magic to actor Vijay at Bigil shooting spot

actor vijay, vijay, vijay bigil, vijay thalapathy 64, master first look poster, விஜய், மாஸ்டர், தளபதி 64, Vijay fan show magic, விஜய்க்கு மேஜிக் காட்டிய ரசிகர், fan magic to actor Vijay at Bigil shooting spot

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர் ஒருவர் விஜய்யிடம் மேஜிக் செய்து காட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய்க்கிழமை வெளியானது. விஜய்யின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதனால், டுவிட்டரில் ஹேஷ்டேக் மாஸ்டர் என்ற வார்த்தை 2 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் மேல் பதிவிடப்பட்டு முதலிடம் பெற்றது.

கடந்த மாதம் விஜய் நடித்து வெளியான பிகில் படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் அட்லி நடிகர் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர் ஒருவர் விஜய்யிடம் கார்ட்ஸ்களைக் கொண்டு மேஜிக் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வீடியோவில், ரசிகரின் மேஜிக்கைப் பார்த்து அசந்துபோன விஜய் ரசிகரின் கையைப் பற்றி பாராட்டுகிறார். இந்த வீடியோ டுவிட்டரிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment