ஆடுவார்னு தெரியும், ஆனா இப்படியா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வீடியோ
Vijay TV Pandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிர் டான்ஸ் சவாலை ஏற்று மாஸ்டர் படப் பாடலுக்கு மாஸாக ஆடிய டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டான்ஸ் மாஸ்டரான குமரன் ஆடுவார்னு தெரியும் ஆனால் இப்படி ஆடுவார்னு தெரியாது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Vijay TV Pandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிர் டான்ஸ் சவாலை ஏற்று மாஸ்டர் படப் பாடலுக்கு மாஸாக ஆடிய டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டான்ஸ் மாஸ்டரான குமரன் ஆடுவார்னு தெரியும் ஆனால் இப்படி ஆடுவார்னு தெரியாது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Vijya TV, Vijay TV Serial, Vijay TV Pandian Stores Serial, Pandian Stores Kathir, விஜய் டிவி சீரியல், விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், Pandian Stores Kumaran, Tamil news, Tamil TV news, Tamil television news, Tamil video, Tamil viral video, Tamil trending video, Vijay tv news, Vijay TV Kumaran, TV actor Kumaran, Kumaran Thangaraj, pandian stores tamil videos, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, விஜய் டிவி, வைரல் வீடியோ, Kumaran Thangaraj Instagram
Vijay TV Pandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிர் டான்ஸ் சவாலை ஏற்று மாஸ்டர் படப் பாடலுக்கு மாஸாக ஆடிய டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சினிமா, டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சினிமா, டிவி நடிகர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர், உடற்பயிற்சி சாவல், டான்ஸ் சவால், ரன்னிங் சவால், விளையாட்டு சவால் என்று ஏகப்பட்ட சவாலை விடுத்து வருகின்றனர். சிலர் சவாலை ஏற்று முறியடித்தும் வருகின்றனர். அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு சவாலை ஏற்று மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரபாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களில் ஒருவராக கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் குமரன். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமாகியுள்ள குமரனுக்கு நிறைய பெண் ரசிகைகள் உள்ளனர். இவர் அடிப்படையில் ஒரு டான்ஸ் மாஸ்டர். இவருக்கு யாரோ ஒருவர் விஜயின் மாஸ்டர் படத்திற்கு உங்களுடைய ஸ்டைலில் ஒரு டான்ஸ் ஆட முடியுமா என்று சவால் விட, சவாலை ஏற்றுக்கொண்ட குமரன், மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலுக்கு மாஸாக ஒரு டான்ஸ் ஆடியுள்ளார். குமரன் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
குமரனின் மாஸ் மாஸ்டர் டான்ஸைப் பார்த்த நெட்டிசன்கள், “குமரன் ஆடுவார்னு தெரியும்... ஆனால், இப்படி ஆடுவார்னு தெரியாது” தெரியாது என்று பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"