இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகள் பாடகி தீ மற்றும் பாடகர் அறிவு இருவரும் இணைந்து வெளியிட்ட ஆல்பம் பாடலான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் யூடியூப்ல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குக்கூ குக்கூ என பாடித் திரிகின்றனர். இண்டிபெண்டண்ட் இசை கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா என்ற யூடியூப் தளத்தை ஆரம்பித்துள்ளார். அதில் முதல் பாடலாக இந்த பாடல் வெளிவந்துள்ளது. இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயற்கை மற்றும் பண்பாட்டை போற்றும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் திரைப்பட பாடல்களை விட அதிக வரவேற்பைப் பெற்று வருவது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 149 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதோடு 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது.
திரைபிரபலங்கள் தொடங்கி பலரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி சுனிதா இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோஒ வெளியிட்டு இருந்தார்.
தற்போது விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் நடித்த நடிகை சமீரா என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலிலும் நடித்துள்ளார். பகல் நிலவு சீரியலில் கூட நடித்த அன்வரை காதல் திருமணம் செய்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் வயிற்றில் குழந்தையுடன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil