Varisu vs Thunivu memes: அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் முதல் உள்ளூர் அரசியல், உலக அரசியல் வரை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் நகைச்சுவை மூலம் கூர்மையான விமர்சனம் செய்து வருகின்றன. இந்தியாவில், சமூக ஊடகங்களில் தமிழில் வெளியாவது போல, வேறு எந்த மாநில மொழியிலாவது இத்த அளவுக்கு மீம்ஸ்கள் வெளியாகிறது என்பது பெரிய கேள்விதான். சினிமா, அரசியல், சமூக என எல்லாவற்றையும் நகைச்சுவையான மீம்ஸ்களால் சாட்டையடி அடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரின் படங்கள் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் ட்விட்டரை முழுமையாக ஆக்கிரமித்திருப்பார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஜனவரி 11-ம் தேதி வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்குகளை மட்டுமல்ல, பாக்ஸ் ஆஃபீஸையும் திணறடித்து வருகிறார்கள்.
ஹெச். வினோத் இயக்கிய அஜித்தின் துணிவு திரைப்படமும் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அப்டேட் வெளியாகி விவாதிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாக இருக்கும். பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில், யார் முந்தினார்கள் என்று ஒரு பெரிய போட்டியே நடந்தது.
வாரிசு படத்தின் தயாரிப்பாளர், விஜய்யின் வாரிசு படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 210 கோடியை வசூலித்து அஜித்தின் துணிவு படத்தை முந்தியதாகக் கூற அஜித் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலா சாத்தியமே இல்லை என்று கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மீம்ஸ்களால் எதிர்வினையாற்றும் நெட்டிசன்கள், 7 நாளில் ரூ.210 கோடியா அப்போது, இயக்குனர் ஹெச். வினோத் இந்த பாக்ஸ் ஆஃபீஸ் மோசடி பற்றி ஒரு படம் எடுக்க வேண்டியதுதான் என்று கூறுவதாக மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். இதனால், வாரிசு – துணிவு பாக்ஸ் ஆஃபீஸ் மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி விஜய்யின் வாரிசு – அஜித்தின் துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் பற்றி வெளியான மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”