விநாயகர் சதுர்த்தியை யொட்டி, ஐதராபாத்தில் விநாயகர் பூஜையில் வைக்கப்பட்ட லட்டு ரூ. 1.87 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு, அந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை யொட்டி, ஐதராபாத்தில் வைக்கப்பட்ட ஒரு விநாயகர் சிலை பூஜையில் வைக்கப்பட்ட ஒரு லட்டு ரூ.1.87 கோடிக்கு பக்தர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள கீர்த்தி ரிச்மோண்ட் வில்லாஸ் பகுதியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த விநாயகர் பூஜையில் வைக்கப்பட்ட லட்டு ரூ.1.87 கோடிக்கு பக்தர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்டு 1 கோடியே 87 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத்தில், விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைக்கப்பட்ட லட்டு இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது புதிய நிகழ்வு அல்ல. இதற்கு முன் இதே பகுதியில், கடந்த 2023-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பூஜையில் வைக்கப்பட்ட 1 லட்டு ரூ.1.26 கோடிக்கும், 2021-ம் ஆண்டில் ரூ.60 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“