Advertisment

ஆபத்தான பாம்பு... இந்தப் புல்வெளியில் கண்டுபிடிங்க பார்ப்போம்!

டிக்டாக் பயனாளி அலெக்ஸ் கிரிடடர் சாட்டர் என்பவர் மறைந்துள்ள பாம்பை கண்டுபிடிக்க ஒரு சாதாரணமாக புல்வெளி படத்தை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆபத்தான பாம்பு... இந்தப் புல்வெளியில் கண்டுபிடிங்க பார்ப்போம்!

இந்த ராட்டில்ஸ்னேக் வகையை சேர்ந்த பாம்பு தனது இரையை பிடிக்க பிடிக்க பதுங்கியிருந்தபோது, ​​​​பனிச்செடிகளின் வரிசையில் தன்னை மறைத்துக் கொண்டுள்ளது. மேலும், கண்டுபிடிக்க கூர்மையான பார்வை அவசியம். கூர்மையான பார்வைத்தின் உடையவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

Advertisment

டிக்டாக் பயனாளி அலெக்ஸ் கிரிடடர் சாட்டர் என்பவர் மறைந்துள்ள பாம்பை கண்டுபிடிக்க ஒரு சாதாரணமாக புல்வெளி படத்தை பகிர்ந்துள்ளார். "விலங்குகளுக்கான குரல்" என்று தன்தை பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவர், விஷமுள்ள ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்பு ஒளிந்துகொண்டு விளையாடுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த பசுமையான இடத்தில் இருக்கும் பாம்பை சில நொடிகளில் கண்டுபிடிக்குமாறு சமூக ஊடக பயனர்களுக்கு அவர் சவால் விடுத்துள்ளார். இந்த பதிவில்"நீங்கள் கவனமாகப் பார்க்க வேண்டும், இந்த பனித்துளிகளுக்கு இடையில் எங்காவது ஒரு பாம்பு உள்ளதா என்று அலெக்ஸ் பார்வையாளர்களிடம் கேட்டுள்ளார்.

Can you spot the deadly rattlesnake lurking on the forest floor?

அது "பாம்பு மட்டுமல்ல - விஷமுள்ள பாம்பும் கூட. எனவே பாம்பை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்."இரண்டு வினாடிகளில், பெரும்பாலான பார்வையாளர்களால், அவரது சுற்றுப்புறத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டறிவது சாத்தியமில்லை. இதனை கண்டுபிடிக்க பலரும் தடுமாறுவார்கள்

ஆனால் இந்த வீடியோவை வெளியிட்ட அலெக்ஸ் பாம்பு எங்கு இருக்கிறது என்பதை சில நிமிடங்களில் சொல்லிவிட்டார். ஆனால் ஒரு சில டிக்டாக் பயனர்கள், அலெக்ஸ் பாம்பு எங்குள்ளது என்பதை சொல்வதற்கு முன்பே கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

அதன்பிறகு திறமையாக பாம்பு மறைந்திருக்கும் இடத்தை தனது ஃபாலோயர்களுக்கு காட்டினார். தொடர்ந்தார்: "எங்கள் கண்களுக்கு முன்பே தெரிந்தது. இது ஒரு தெற்கு பசிபிக் ராட்டில்ஸ்னேக். இப்போதுதான் மழை பெய்ததால்,  இந்த பாம்பு குடிக்கத் தண்ணீர் தேடுவதற்காக வந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

publive-image

இதனால் ஈர்க்கப்பட்ட டிக்டாக் பயனர்கள் தங்கள் பாம்பு கண்டறிதல் குறித்த பதிவுவை பகிர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக கருத்து கூறிய ஒருவர்,  "புல் வித்தியாசமாக இருக்கும் போது இதனை கண்டறிவது எளிதானது என்று கூறியுள்ளார். இதேபோல் பலரும் கருத்துதெரிவித்தநிலையில், சிலர் தங்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர்.

தெற்கு பசிபிக் ராட்டில்ஸ்னேக்ஸ் பொதுவாக தென்மேற்கு கலிபோர்னியாவிலிருந்து மெக்சிகோ வரை காணப்படுகின்றன. ஆபத்தான விஷ வகைகளின் முக்கியமா வகைகளுக்கு பிரபலமான இந்த கை பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. இது 55 அங்குல நீளம் வரை வளரக்கூடியது மற்றும் பழுப்பு, சாம்பல் அல்லது மஞ்சள் தோலைக் கொண்டிருக்கும், இதனால் அவை காடுகளில் எளிதில் மறைந்துவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment