‘கவலைப்படாத டா எல்லாம் சரியாகிடும்’ - வைரலாகும் அசிஸ்டெண்ட் நாய்

பல லட்ச லைக்குகளுடன் வெவ்வேறு சமூக வலைதளங்களில் ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படம் பல செல்லப்பிராணி காதலர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

நாய்கள் மனிதனின் செல்ல நண்பனாக இருக்கும் பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். நாய்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் எப்போதுமே சமூக வலைதளங்களில் வைரலாகும். இப்போதும் இப்படியான செய்தி ஒன்று இருக்கிறது. ஆனால் இந்த முறை நாயும் மனிதனும் அல்ல, நாயும் – நாயும் தான்!

ஒரு கால்நடை மருத்துவரிடம் உதவியாளராக இருக்கும், நாய் ஒன்று நோயாளியாக மருத்துவமனைக்கு ‘விசிட்’ செய்த மற்றொரு நாயை படுக்கையில் படுக்க வைத்து, ‘கவலை படாத, எல்லாம் சரியாகிடும்’ என்ற முகபாவனையுடன் இருக்கும் அதன் படங்கள் சமூக வலைதளங்களில் தெறி ஹிட்டாகிக் கொண்டிருக்கிறது.

பல லட்ச லைக்குகளுடன் வெவ்வேறு சமூக வலைதளங்களில் ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படம் பல செல்லப்பிராணி காதலர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. பலர் தங்களின் செல்லப்பிராணி மறைந்த / இழந்த கதையையும் நினவுக் கூர்ந்து வருகிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close