New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-18.jpg)
viral funny video
இதுவரை சுமார் 11.5 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
viral funny video
viral funny video : செல்லப்பிராணிகள் வளர்ப்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும். சிறு வயதில் குழந்தைகள் ஆசைப்படும் விஷயங்களில் மிக முக்கியமானது நாய், பூனை, கிளி என ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பதையே. உணவு வைப்பது, பேசுவது, விளையாடுவது, பராமரிப்பது என அவற்றுடன் அவர்கள் கழிக்கும் நேரத்தால் அந்த விலங்குகளை விட, மனவளம் விஷயத்தில் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகள் அதிகம்.
குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்களுக்கும் செல்லப்பிராணிகள் தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு உறுப்பினர் போல தான். இதுவரை சமூகவலைத்தளங்களில் எத்தனையோ வகையான செல்லப்பிராணிகள் வீடியோ வெளியாகி அது ஹிட்டும் அடித்தது உண்டு.அந்த வகையில் கடந்த சில தினங்களாக பூனை ஒன்றின் க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது பூனைக்கு அதன் முதலாளி தரும் தண்டனை. அந்த தண்டனையையும் அசால்ட்டாக என்ஜாய் பண்ணி அந்த பூனை விளையாடுவது பார்ப்பதற்கே க்யூட்டாக இருக்கிறது. மியாவ்ஜி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
This punishment is not working... pic.twitter.com/Gky81iQA0q
— Mr. Meowgi (@Mr_Meowwwgi) October 3, 2019
தனது பூனைக்கு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் வைத்து வாயில் அடித்து தண்டனை அளிக்கிறார்.அது இதுபோல பல தண்டனைகளை பார்த்து இருக்கும்போல அசால்ட்டாக அந்த தண்ணீரை குடித்து விட்டு செல்கிறது.இதைப்பார்த்த பலரும் தாங்கள் தங்களது செல்லப்பிராணிக்கு கொடுத்த தண்டனைகளை பகிர, இதுவரை சுமார் 11.5 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.