அமெரிக்காவின் நியூ யார்க் நகரில், ஓரின காதல் ஜோடியான இரு பெண்கள், தங்கள் திருமணத்திற்காக ஃபோட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.
அந்த புகைப்படங்களில் உள்ள இரு பெண்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவைச் சேர்ந்த பெண்ணின் பெயர் அஞ்சலி சக்ரா. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் பெயர் சுந்தாஸ் மாலிக். அஞ்சலி இந்து மதத்தைச் சேர்ந்தவர், சுந்தாஸ் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.
data-instgrm-version="12">View this post on InstagramA post shared by Sufi Malik (@sufi.sun) on
A post shared by Sufi Malik (@sufi.sun) on
A post shared by Sufi Malik (@sufi.sun) on
இவர்களது புகைப்படத் தொகுப்பு, இணையவாசிகளால சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் வைரலாகி உள்ளனர். ஆனால், இம்முறை எதிர்மறை விஷயத்திற்காக.
இருவரும் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். ஆனால், அந்த வீடியோவை டிக்டாக் நிறுவனம் நீக்கிவிட்டது.
"சமூக வழிகாட்டுதலை மீறிய செயல்" என்று கூறி டிக் டாக் அந்த வீடியோவை நீக்கியிருக்கிறது. இதனால், கடுப்பான அந்த லெஸ்பியன் ஜோடி, டிக்டாக் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது....?
2, 2019my girl and I rep that Desi drip ✨ pic.twitter.com/l3zHqQpRMg
— Anjali C. (@anj3llyfish)
my girl and I rep that Desi drip ✨ pic.twitter.com/l3zHqQpRMg
— Anj (@anj3llyfish) December 2, 2019
இதனை அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, சமூக வாசிகள் இக்காதல் தம்பதிக்கு ஆதரவாகவும், டிக்டாக் நிறுவனத்தை விமர்சித்தும் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.