/indian-express-tamil/media/media_files/2025/08/16/viral-kids-performance-2025-08-16-22-21-11.jpg)
ஆஸ்ட்ரிச் வேடத்தில் கலக்கிய சிறுவன்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்! ஆஸ்கர் கேட்கும் நெட்டிசன்கள்!
மாறுவேட போட்டி என்றாலே வழக்கமான தலைவர்கள், சூப்பர்ஹீரோஸ் என ஒரே மாதிரியான உடைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், கேரளாவில் குட்டிப்பையன் செய்த புதுமை, ஒட்டுமொத்த இணையத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆல் செயின்ட்ஸ் பப்ளிக் பள்ளி நடத்திய சுதந்திர தின விழாவில், நெருப்புக் கோழி (ostrich) வேடமிட்டு சிறுவன் மேடையில் செய்த குறும்புகள், சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், அந்த சிறுவன் அச்சு அசலாக நெருப்புக் கோழியைப் போலவே வேடமிட்டிருந்தான். பெரிய அலகுகள், இறகுகள், நீண்ட கால்கள் என அவன் அணிந்திருந்த உடை தத்ரூபமாக இருந்தது. ஆனால், அந்த உடையின் காரணமாக அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அதனால், 2 ஆசிரியர்கள் அவனுக்கு வழிகாட்டி, மெதுவாக மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
குட்டி நெருப்புக் கோழி நடனமாடி, மெதுவாக மேடையைக் கடக்கும் அழகைப் பார்த்ததும், பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, அந்தச் சிறுவன் வேடிக்கையான "ட்விஸ்ட்"-ஐ சேர்த்தான். திடீரென, நெருப்புக் கோழி ஒரு முட்டையிடுவது போல நடித்து, பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தான்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 3 கோடி பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும், "படைப்பாற்றல், நடிப்பு அற்புதம்," "இவனுக்கு ஆஸ்கார் கொடுங்கள்" என அந்தச் சிறுவனையும், அவனது ஆசிரியர்களையும் பாராட்டி வருகின்றனர். இந்த குட்டிப்பையனின் புதுமையான முயற்சி, பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதோடு மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.