12-ம் வகுப்பு வினாத்தாள் : இது தான் கேள்வியா? இல்ல நெஜமாவே இது தான் கேள்வியா?

உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் இந்த தேர்வினை எழுதிய மாணவர்களிடம் போய் கேளுங்கள் - ட்வீட் செய்தவர் பதில்

உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் இந்த தேர்வினை எழுதிய மாணவர்களிடம் போய் கேளுங்கள் - ட்வீட் செய்தவர் பதில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral News COHSEM 2020 question paper

Viral News COHSEM 2020 question paper

Viral News COHSEM 2020 question paper : நாம் அனைவரும் நம் வாழ்வில் எத்தனையோ பரீட்சைகளை எழுதியிருப்போம். பாஸ் ஆகியிருப்போம் அல்லது 35 மதிப்பெண்கள் வாங்க வழி இல்லாமல் ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் செமத்தியாக வாங்கி இருப்போம். சில நேரங்களில் வழி இல்லை என்று வருகின்ற போது ”பிட்”அடித்திருப்போம்.  ஆனால் அப்போதும் கூட இப்படி ஒரு கேள்வியை யாரும் நம்மிடம் கேட்கவில்லை.

Advertisment

மணிப்பூரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் council of higher secondary education examination 2020(COHSEM) -  எனப்படும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் ஒரு கேள்வி கேட்டிருக்கின்றார்கள். அதாவது பாஜகவின் சின்னத்தை வரைய வேண்டுமாம். அந்த கேள்விக்கு மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? நான்கு.

Viral News COHSEM 2020 question paper

ஒரு தாமரையை வரைய நான்கு மதிப்பெண்களா என்றெல்லாம் கேட்காதீர்கள். அதே வினாத்தாளில் நேருவின் தவறான பண்புகளை பட்டியிடலிடுங்கள் என்றும் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.  அக்கீ சோரோகைபம் என்ற பயனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வினாத்தாளின் புகைப்படத்தை பதிவு செய்ய அது வைரலானது. பலரும் இந்த வினாத்தாளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, “உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் இந்த தேர்வினை எழுதிய மாணவர்களிடம் போய் கேளுங்கள்” என்று கூறினார்.

Advertisment
Advertisements

அக்கி சோரோகைபமின் சகோதரி இந்த பரீட்சையை எழுதிவிட்டு வந்து வினாத்தாளை தன்னுடைய அண்ணனிடம் காட்டியுள்ளார். இந்த வினாத்தாளை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய அது வைரலானது. சமூக செயற்பாட்டாளர்களும் தங்களின் கடுமையான அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Bjp Manipur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: