மின்னல் தாக்கி ஒரே இடத்தில் பலியான 18 யானைகள்; வனத்துறையினர் அஞ்சலி

இது தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வனத்துறை அமைச்சர் உத்தரவு

Viral news Herd of 18 Indian elephants die

இந்தியாவில் மொத்த யானைகளின் எண்ணிக்கை 27 ஆயிரம். அதில் 21% யானைகள் அசாமில் உள்ளன. சமீபத்தில் கந்தொலி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மின்னல் தாக்கியதில் ஒரு கூட்டத்தை சேர்ந்த 18 யானைகள் உயிரிழந்துள்ளன.

அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள பமுனி பாஹர் அருகே ஒரே நேரத்தில் இப்படியான சோக நிகழ்வு ஏற்பட்டது அனைவரையும் சோகத்திற்கு ஆளாகியுள்ளது. வனப்பகுதிக்கு அருகே வாழ்ந்து வரும் கிராமமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட வனத்துறையினர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மரணிக்கும் யானைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அம்மாநில வனத்துறை அமைச்சர் பரிமள் சுக்லபைத்யா இது தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இறந்த யானைகளுக்கு அம்மாநில வனத்துறையினர் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral news herd of 18 indian elephants die when forest struck by lightning

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com