Viral news in Tamil:நடிகை ரெஜினா கசாண்ட்ரா ’கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கேடி பில்லா கில்லாடி ரங்கா,ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுகுவர்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விஷாலுடன் இவர் நடித்த சக்ரா திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது.
இவர், 2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் ‘கிகி சேலஞ்ச்’ வைரலான போது, காருக்கு வெளியே நடனமாடி பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று கூறுவது போல் படகின் மீது ஜாலியாக நடனமாடி உடற்பயிற்சி செய்வதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு ‘வைல்ட் வாரியர் ரேஸ்’ போட்டிக்காக தயாராகி வருவதாகவும் அந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், பரவலான விமர்சனங்களை நெட்டிசன்கள் அள்ளித் தெளிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook
Web Title:Viral news in tamil actress regina cassandra exercise and dance video goes viral in social media
ராமஜென்ம பூமி நன்கொடை: ரூ. 11,000 வழங்கிய திமுக எம்.எல்.ஏ மஸ்தான்
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!