Viral news in tamil: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் எழுதி இசையமைத்து தயாரித்துள்ள திரைப்படம் ’99 சாங்ஸ்’. இத்திரைப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். புதுமுக நடிகர் ஈஹான் பட் மற்றும் எடில்ஸி வர்ஹாஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் ரஹ்மான், இயக்குநர் விஸ்வேஷ் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் தொடக்கத்தில் விருந்தினர்களை வரவேற்று பேசிய தொகுப்பாளர், ரஹ்மானை தமிழிழும், நடிகர் ஈஹான் பட்டை ஹிந்தியிலும் வரவேற்று பேசினார். அப்பொழுது குறுக்கிட்ட ரஹ்மான், ”ஹிந்தி?” என்று கூறிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். மேலும், ரஹ்மான் தொகுப்பாளரைப் பார்த்து நான் உங்களிடம் முன்பே தமிழ் பேச தெரியமா என்று கேட்டேனே? என்று மேடையின் கீழே நின்று கேட்டார்.
தொகுப்பாளரோ ஈஹான் பட் –ஐ வரவேற்கவே ஹிந்தியில் பேசினேன் என்று கூறினார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், நான் நகைச்சுவைக்காக சொன்னேன் என்று சிரித்துக்கொண்டே மேடைக்குச் சென்றார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரஹ்மானின் இந்தச் செயலை வரவேற்று பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil