அர்ச்சனா சன் டிவியில் ஒளிப்பரப்பாகிய ‘இளமை புதுமை’ நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளாராக அறிமுகமானார். பின்பு ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் இல்லங்கள் தோறும் சென்றடைந்தார். இவர், ’ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமப சீனியர்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் முன்னனி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் அவர் இருக்கும்போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் அனைவரையும் ஈர்த்து வருகிறார். அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மகள் ஸாரா
இந்நிலையில், அர்ச்சனாவின் மகள் ஸாராவும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். அம்மா அர்ச்சனா உடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அவரும் தற்போதே தொகுப்பாளராகவும் மாறி வருகிறார். வருங்காலத்தில் அவரும் பெரிய தொகுப்பாளராக வர வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தற்போது அர்ச்சனா தனது மகள் ஸாரா உடன் எடுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், “வாழ்க்கை ஒரு முழு வட்டம் ஆகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா நிர்மலா, என்னுடன் நிகழ்ச்சிகளுக்கு வருவார். இப்போது நான் அம்மாவாக ஸாரா உடன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன். என்ன ஒரு அழகான தருணம் இது” என அர்ச்சனா நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.
இதற்கு அறந்தாங்கி நிஷா ‘அழகு ஸாரா’ என்று கமெண்ட் செய்துள்ளார்.