Puttu Ice Cream video goes viral: புதுமையா பல விஷயங்கள கண்டு பிடிச்சு முன்னேறுங்கப்பா அப்டின்னு சொன்னா நம்ம மக்கள் சாப்பாட்டு விஷயத்துல தான் புதுமைய கொண்டு வந்து இறக்குறாங்க.. கொஞ்சம் நஞ்ச புதுமையெல்லாம் இல்லை. புதுமையோ புதுமை. புதுமை மட்டும் தான்..
தென்னிந்தியாவில் தமிழக மற்றும் கேரள காலை உணவுகளில் அதிகம் இடம் பெறும் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது புட்டு. நம்மூருல இட்லி தட்டுல போட்டு வேக வைக்க, கேரள மக்களோ குழாய்புட்டு செஞ்சு அசத்துவாங்க… அதுல ஒரு புதுமைய செய்றேன்னும் மக்கள் கெளம்பியிருப்பது ஒரு ருசிகரமான ஆபத்து என்றே சொல்லலாம்.
புட்டு சட்டியில் அரிசி மாவு போடுவதற்கு பதிலாக ஐஸ்க்ரீமையும், இடையில் நிரப்ப தேங்காய் தூவலுக்கு பதிலாக கார்ஃப்ளேக்ஸ் மற்றும் சாக்கோசிப்களையும் பயன்படுத்தி இந்த புட்டு ஐஸ்க்ரீம் செஞ்சு தர்றாங்க…
Foodie World என்று அழைக்கப்படும் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் நடத்தும் யூடியூப் சேனலில் புட்டு ஐஸ்க்ரீம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் பலூடா என்ற உணவகம் கேரளாவில் தாங்கள் வைத்துள்ள 11 கிளைகளில் இந்த புட்டு ஐஸ்க்ரீமை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஐட்டம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மக்கள் இதனை தேடி வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர் என்று பலூடாவின் ஸ்டோர் மேனர் ஒருவர் கூறியுள்ளார்.
நீங்கள் கேரளாவிற்கு சென்றால் இந்த உணவை ட்ரை செய்வீர்களா? இந்த உணவு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil