/tamil-ie/media/media_files/uploads/2020/01/a16.jpg)
smriti irani speech in madurai on pro-caa rally - மதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் - திமுகவுக்கு சரமாரி கேள்வி
Viral news in Tamil, Smirithi irani dandiya dance perfoms in TN election campaign: கோவை வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக தொண்டர்களுடன் இணைந்து “தாண்டியா” நடனமாடினார். இது அங்கிருந்த தொண்டர்களை மிகுந்த உற்சாகமாக்கியது. மேலும் இது சம்பந்தமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
smriti irani speech in madurai on pro-caa rally - மதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் - திமுகவுக்கு சரமாரி கேள்வி
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளன. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக , மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஒருகூட்டணியிலும், அதிமுக, பாமக, பாஜக, தாமக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியிலும் களம் காண்கின்றன.
இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்க கோவை வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக தொண்டர்களுடன் இணைந்து “தாண்டியா” நடனமாடினார். இது அங்கிருந்த தொண்டர்களை மிகுந்த உற்சாகமாக்கியது. மேலும் இது சம்பந்தமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH Coimbatore: Union Minister Smriti Irani performs traditional dance* with BJP workers, as a part of election campaigning for Vanathi Srinivasan, the party's candidate from Coimbatore South constituency.#TamilNaduElections pic.twitter.com/1S6zQF2RgL
— ANI (@ANI) March 27, 2021
இதற்கிடையில் தமிழகம் வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது எனவும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆறு ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்கள் பாராட்டி பேசி வருகின்றனர் என்றும் கூறினார்.
மேலும், "வாரிசு அரசியல், பணம், கட்டபஞ்சாயத்து இதுதான் திமுக "என்று திமுகவை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.