இணையத்தை கலக்கும் தல – தளபதி சந்திப்பு: ஃபேன்ஸ் ரியாக்ஷன்!

Former indian cricketer MS Dhoni meets Actor vijay at Chennai Tamil News: சமூக வலைதள பக்கங்களை கலக்கி வரும் நடிகர் விஜய் – கிரிக்கெட் வீரர் எம். எஸ் தோனி சந்திப்பு புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருவதோடு சுவையான கமெண்ட்ஸ்களை தட்டிச் சென்றுள்ளனர்.

Viral news in tamil: Thala dhoni meets thalapathy vijay viral photo

MS Dhoni meets Actor vijay Tamil News: சென்னை கோகுலம் ஸ்டூயோவில் விளம்பர படப்பிடிப்பிற்காக வந்த கிரிக்கெட் வீரர் எம். எஸ் தோனி அதே ஸ்டூயோவில் பீஸ்ட் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ் தோனி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள தளபதி விஜய் உடனான சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாப்பட்டு வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மழை பொழிந்து வரும் ரசிகர்கள், தங்களின் கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு இந்த புகைப்படத்தை தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள சில ரசிகர்கள் ‘pic of the day’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

‘எனக்கு உத்வேகம் ஊட்டும் இருவர் ஒரே பிரேமில் உள்ளனர்’ என ஒரு ரசிகர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ ”Master’-Class’ என ஒரு வார்த்தையில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வெளி வந்த சில நிமிடத்திலேயே ரசிகர் ஒருவர் அசத்தலான மீம் ஒன்றை இறங்கியுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral news in tamil thala dhoni meets thalapathy vijay viral photo

Next Story
50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை மீட்கும் தீயணைப்புத் துறையினர் – வைரலாகும் வீடியோViral video, trending viral video, kerala videos,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com