New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/rohit-4.jpg)
ind vs eng moeen ali news in tamil: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலியிடம் வலிமை திரைப்படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர் ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்று விளையாடும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. தற்போது இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி கடந்த 13- தேதி முதல் நடைபெற்று வருகிறது. மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 134 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் - அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து 2-ம் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள இந்திய அணி நிதானத்துடன் ஆடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலியிடம் வலிமை திரைப்படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர் ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான நடிகர் விஜய், தனுஷ் போன்றோரின் திரைப்படங்கள் குறித்து அப்டேட்டுகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து நடிகர் அஜித் குமார் நடித்து வரும் வலிமை திரைப்படம் குறித்து சரியான அப்டேட்டுகளை வழங்கப்படவில்லை. எனவே அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரையும், இயக்குனர் எச். வினோத்தையும் தல அஜித் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தினம் டேக் செய்தும், 'அப்டேட் எப்போ?' என்று கேட்டுத் தொல்லை செய்தும் வருகிறார்கள்.
வலிமை படம் குறித்துக் கேட்ட அஜித் ரசிகரின் வீடியோவில், 'இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது நடிகர் அஜித் ரசிகர், அலி பாய் வலிமை அப்டேட் எப்போ என்று கேட்டகிறார். அதற்கு மொயீன் அலி, புன்னகையுடன் மறுபடியும் பீல்டிங்கில் ஈடுபடுகிறார்.
#Thala fans asking #Valimai update to #MoeenAli ...???????????????? pic.twitter.com/3ZCSfvmFEt
— Anand (@anandviswajit) February 13, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.