”எனக்கு ராஜாவா நான்” ஒரே நாளில் 2 பெண்களுடன் திருமணம்.. கணவருடன் டூயட் பாடும் மனைவிகள்!

இருவரும் ஒன்றாக வாழவும் ஒப்புக்கொண்டனர். இதனால் இவர்கள் மூவருக்கும் திருமணம்.

By: Updated: January 8, 2021, 10:33:05 AM

viral news tamil man get married 2 womens : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.. விவசாயில் சந்து மவுரியா ப்ளே லிஸ்டில் கட்டாயம் இனி இந்த பாடல் இருக்கும். பின்ன சும்மாவா ஒரே நாளில் இரண்டு திருமணங்களை செய்து கொண்டு மனிஷன் ராஜா மாறி வாழு போறாரு.. (எப்படி வேண்டுமானாலும் ஆகலாம்)

முரட்டு சிங்கிள்கள் சாபம் உங்களை சும்மா விடாது..90ஸ் கிட்ஸ் நாங்க ரொம்ப பாவம் டா… சட்டீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரை சேர்ந்த விவசாயி சந்து மவுரியா சத்தாரி மற்றும் ஹசீனா என்ற இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சத்தாரிக்கும் சந்து மவுரியா ஆகிய இருவரும் செல்போன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர், இதனிடையே சந்து மவுரியா உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது ஹசீனா என்ற பெண்ணை சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்த மூவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒன்றாக வாழவும் ஒப்புக்கொண்டனர். இதனால் இவர்கள் மூவருக்கும் ஜனவரி 3-ஆம் தேதி திருமணம் நடந்தது. இப்போது அவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமணத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Viral news tamil man get married 2 womens on same day tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X