New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-20.jpg)
புலிகள் மிகவும் வயசாகிவிட்டால், மற்ற புலிகளுடன் சண்டை போட்டதில் காயம் ஏற்பட்டால், பற்கள் விழுந்து கடவாய் ஆடத் துவங்கும் போது, பலவீனமாய் தன்னை உணரும் போது தான் எளிய இரையை விரும்பி மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வருகிறது.
Viral News Tamil Trending video of tiger running back to the forest : வனவிலங்குகள் குறித்த வீடியோக்களை நாம் தினமும் இந்த வைரல் பிரிவில் பார்த்து வருகின்றோம். வனவிலங்குகள் குறித்த புரிதல்களுக்கு தேவையான சில முக்கியமான கருத்துகளையும் நெட்டிசன்கள் அது இன்றைய இணைய உலகிற்கு தேவையான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வாசகர்களிடம் சேர்த்து விடுவது நல்லது.
Friday evening after the last bell pic.twitter.com/lPewGg35CL
— Praveen Angusamy IFS 🐾 (@JungleWalaIFS) June 24, 2021
புலிகள் எப்போதும் மனிதனை வேட்டையாடாது. புலிகள் மிகவும் வயசாகிவிட்டால், மற்ற புலிகளுடன் சண்டை போட்டதில் காயம் ஏற்பட்டால், பற்கள் விழுந்து கடவாய் ஆடத் துவங்கும் போது, பலவீனமாய் தன்னை உணரும் போது தான் எளிய இரையை விரும்பி மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வருகிறது. ஆனாலும் ஆடு, மாடு என்பது தான் இலக்காக இருக்கும். மனிதர்களை கடித்து ஒருமுறை பழகிவிட்டால் அதன் பிறகு தான் அடிக்கடி மனிதர்களை தாக்க துவங்குகிறது. வனத்துறையின் இந்த வகையான புலிகளை மட்டுமே பூங்காகளுக்கு கொண்டு வருகின்றனர்.
மற்ற புலிகள் அனைத்தையும் பொதுவாக பிடித்து வனத்திற்குள் விட்டுவிடுவது வழக்கம். அப்படி பிடிக்கப்பட்ட புலி ஒன்றுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட போது அது அடையும் பரவச எல்லை தான் இந்த வீடியோ. வனத்துறை அதிகாரி ப்ரவீன் கஸ்வான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.