New Update
![viral](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2023/08/elephant-2.jpg)
viral Optical Illusion- Can you spot horse in this picture
viral Optical Illusion- Can you spot horse in this picture
ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன,
அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை.
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்!
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானை ஒன்று மரக்கட்டையை தூக்கிக்கொண்டு செல்கிறது. அதன் பின்னணியில் சில மரங்களும், வீடும் இருக்கிறது. ஆனால் இதில் யானையுடன் குதிரையும் மறைந்திருக்கிறது. அதை 10 விநாடிகளில் கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான இன்றைய சவால்.
படத்தில் யானை மட்டும் தானே தெரிகிறது... என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கண்களை நன்றாக உற்றுநோக்கினால் அந்த குதிரையை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். இதுவரை 1% பேர் மட்டுமே இதை கண்டுபிடித்துள்ளனர்.
உங்களுக்கான 10 விநாடிகள் ஆரம்பித்து விட்டது…
என்ன! அந்த குதிரை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டீர்களா?
ஒருவேளை உங்களால் இன்னும் குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நாங்கள் ஒரு குறிப்பு தருகிறோம்.
படத்தின் இடது பக்கத்தில் யானையின் வால் இருக்கும் பகுதியைச் சுற்றி பாருங்கள்... உங்கள் கண்ணுக்கு அது தென்பட வாய்ப்புள்ளது.
உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? பதிலை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்…
இப்போது குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.