ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை, அதிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவற்றை விட வித்தியாசமாக உணரப்படுகின்றன. illusion என்ற சொல் லத்தீன் வார்த்தையான illudere என்பதிலிருந்து வந்தது, அதாவது “கேலி செய்வது”.
Advertisment
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் கடினமானது. இந்த படத்தில், ஒரு கொடூர காட்டுக்குள் இலை சருகுகளுக்கு மத்தியில் பதுங்கியிருக்கும் கொடிய பாம்பை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்!
கழுகு-கண்களைக் கொண்ட பலரும், கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத பாம்பைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், அது அவ்வளவு எளிதில் சிக்கவில்லை. காடுகளுக்கு செல்லும்போது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும், கவனிக்க வேண்டியதன் காரணம் இதுதான்.
இந்த படம் பார்வையாளர்களை குழப்பியது.
இதைப் பார்த்த ஒருவர், பார்வையில்லாதவர்கள் கம்புகளைப் பயன்படுத்துவதைப் போல உங்கள் வாக்கிங் ஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டும்," என்று கிண்டல் செய்தார்.
"இதனால்தான் நான் மூடிய காலணிகளை அணிகிறேன்," என்று மற்றொருவர் கூறினார்.
காடுகளில் இருக்கும்போது உங்களால் முடிந்தவரை சத்தமாக நீங்கள் கத்த வேண்டும். இது எல்லாவற்றையும் பயமுறுத்தும்" என்று மூன்றாவது நபர் எழுதினார்.
என்ன இன்னும் இலை சருகில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லையா?
சற்று நெருக்கமாகப் பாருங்கள், நடுவில் மஞ்சள்-பச்சை இலையின் இடதுபுறத்தில் S வடிவத்தைக் காண்பீர்கள். விஷமுள்ள இந்த பாம்பு வெளிர் பழுப்பு நிற முக்கோணங்களைக் கொண்டுள்ளது, இலைகளுக்குள் மறைந்திருக்கிறது. இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கீழே உள்ள படத்தை பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“