New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/optical-illusion-how-many-snakes-can-you-see_628ccdc86fca5-1.jpg)
Viral Optical Illusion How Many Snakes Can You Spot
இன்று, உங்களைத் திகைக்க வைக்கும் மற்றொரு இல்யூஷன் இங்கே உள்ளது.
Viral Optical Illusion How Many Snakes Can You Spot
ஆப்டிகல் இல்யூஷன்’ குழப்பமானவை. அவற்றில் சில நமது மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன, சில ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
இன்று, உங்களைத் திகைக்க வைக்கும் மற்றொரு இல்யூஷன் இங்கே உள்ளது. பாம்புகளை மறைத்து வைப்பது போல் தோன்றும் ஒரு உருவத்தால் மக்கள் திகைத்துப் போயுள்ளனர் - ஆனால் அங்கு எத்தனை ஊர்வன உள்ளன என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
Reddit இல் வெளியிடப்பட்ட படம், தரையில் உடைந்த மரக்கிளைகள், பசுமைச் செடிகள் மற்றும் இலை சருகுகளைக் காட்டுகிறது. ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் கொடிய உயிரினங்களும் உள்ளன.
எத்தனை பாம்புகள் உள்ளன?
சில ரெடிட் பயனர்கள் படத்தில் மூன்று பாம்புகள் இருப்பதாக கூறுகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் 4-5 பாம்புகளை இருப்பதாக என்று கூறியுள்ளனர்.
ஆனால் சிலர் ஒன்றை கூட பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். "ஜீரோ, நான் இப்போது இறந்துவிட்டேன்," என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். "நான் பாம்புகளைப் பார்க்கிறேன், ஆனால் என்னால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை. அவற்றைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓடிப்போவதுதான்" என்று மற்றொரு பயனர் கேலி செய்தார்.
நீங்கள் இதேபோல், மற்றொரு சவாலை விரும்பினால், பல்வேறு உயிரினங்களின் படங்களை மறைத்து வைத்திருக்கும், ஒரு மாபெரும் யானையின் ஆப்டிகல் இல்யூஷன் இங்கே உள்ளது.
முதல் பார்வையில் யானை, நாய், பூனை, கழுதை போன்றவற்றை எளிதில் பார்க்க முடியும். ஆனால், யானையின் உடலின் ஒரு பகுதியாக மறைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிகச் சிறிய உயிரினங்களைக் கண்டுபிடித்து அடையாளம் காண்பதுதான் பிரச்சினை.
படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரினங்களின் சரியான எண்ணிக்கையை யாராலும் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த படத்தில் 16 உயிரினங்கள் மறைந்திருப்பதாகச் சொன்னால் என்ன செய்வீர்கள்? ஆமாம், பதினாறு!
ஒரு பயனர் 16 பதில்களை தெளிவான கிராஃபிக்கில் வெளிப்படுத்தினார்.
படத்தில் உள்ள யானையில், நாய், மீன், கொசு, கழுதை, முதலை, வாள்மீன், இறால், கோழி, ஆமை, இறால், எலி, பாம்பு, டால்பின் மற்றும் பூனை ஆகிய 16 உயிரினங்கள் மறைந்துள்ளன.
இப்போ தெரியுதா பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.