Advertisment

அட நீங்க ஃபிட் தான் பாஸ்... அதுக்காக இண்டெர்வியூல புஷ்-அப் எல்லாமா எடுப்பீங்க?

யோகா, புஷ்-அப், வொர்க் அவுட் பண்றது எல்லாத்தையும் விட்டுட்டு நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கன்னு வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

author-image
WebDesk
Jun 30, 2020 11:21 IST
Viral Video of Boris Johnson doing push-ups to prove recovery from Covid-19

Viral Video of Boris Johnson doing push-ups to prove recovery from Covid-19

Viral photo of Boris Johnson doing push-ups to prove recovery from Covid-19 : கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான் இங்கிலாந்து. அந்நாட்டு முதல்வர் போரீஸ் ஜான்சனுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு நலமுடன் மீண்டார். 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் மீண்டும் பிரதமராக தன்னுடைய பதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

Advertisment

கொரோனா ஊரடங்கால் பெரும் இழப்பை சந்தித்த அந்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முக்கியமான முடிவுகளை மேற்கொண்டு வருகிறார் அவர். மெய்ல் பத்திரிக்கை நடத்திய நேர்காணலின் போது “இங்கிலாந்தின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தினால், மந்த நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுவிடலாம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது நான் மிகவும் ஃபிட்டாக இருக்கிறேன் என்று கூறிய அவர், என்னுடைய உடல் தகுதியை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் நான் ப்ரெஸ்-அப் செய்கிறேன் என்று கூறி நேர்காணலின் போது தரையில் புஷ்-அப் செய்து காட்டியுள்ளார் ஜான்சன். ஞாயிற்றுக் கிழமை மெயில் தலையங்கத்தில் அவரின் உடற்பயிற்சி புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். மெயிலின் நேர்காணலின் போது அவர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார். அதனை புகைப்படம் எடுத்து இவ்வாறு மெயில் கூறுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Boris Johnson #Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment