Viral photo of father-daughter’s matching banana outfits : ஒவ்வொரு தம்பதியினர் வாழ்விலும் புதுவரவாய் வந்து சேரும் குழந்தைகளைக் கண்டால் இரு தரப்பு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி என்பது அளவிட முடியாத ஒன்றாக தான் இருக்கும். புதிதாக பிறந்திருக்கும் தன்னுடைய மகளுக்கு வாழைப்பழ ஆடை வாங்கி அணிவித்ததோடு, அவரும் அதே போன்ற ஒரு ஆடையை வாங்கி உடுத்தி அக்குழந்தையின் அம்மாவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
Advertisment
I heard my husband whispering to our daughter about ordering something on Amazon for her. Then I came home from the grocery today to this. pic.twitter.com/1AXk7rXBfJ
வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள துர்ஹாம் பகுதியில் வசித்து வரும் எழுத்தாளர் - ஆசிரியர் அன்னா கஸ்மரியான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகள் மற்றும் கணவரின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.
I’ve been a parent for less than 24 hours and so far I’ve already dressed her up as a burrito. pic.twitter.com/ZxcInkRCWS
இந்த புகைப்படத்தை இதுவரை 2 லட்சத்தி 44 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த புகைப்படம் எடுத்த தருணத்தில் அவர்கள் குழந்தையின் அடக்க முடியாத சிரிப்பு தான். பார்க்க பார்க்க அவ்வளவு க்யூட்டாக உள்ளது இந்த பனானா ட்ரெஸ்ஸூம் அந்த குட்டிப்பாப்பாவின் அழகு புன்சிரிப்பும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil