Viral photo of man scaled windows to seeing his mother demising due to coronavirus : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை இழந்து வாடி வருகின்றனர். இன்றைய சூழலுக்கு ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் அன்புடன் நடந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
கொரோனாவால் ஏற்படும் தீமை என்னவென்றால் நம் உற்ற நண்பர்களுக்கு இறுதியாய் ஒரு முத்தம் கொடுக்க கூட வழி அற்று போய்விடுகிறது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் நபர்கள் குணம் அடைந்து வீடு வந்தாலே ஒழிய அவர்களை வீட்டில் இருந்து அனுப்பும் போது காண்பது தான் இறுதியானது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஜிகாத் அல் சுவைத்தி. அவருடைய தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிர்ந்தார். உறவினர்கள் யாருக்கும் நோயாளிகளை பார்க்க அனுமதி கிடையாது என்ற காரணத்தால் தினமும் சுவைத்தி தன்னுடைய அம்மாவை மருத்துவமனை ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்ப்பது வழக்கம்.
அவரைப் போன்றே அனைவரின் வேண்டுதலும் அவர் தாயார் குணம் அடைய வேண்டும் என்பது தான். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் சுவைத்தியின் தாயார் மரணத்தை தழுவினார். சுவைத்தியின் தாயார் மரணமடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பார்க்கும் அனைவரின் மன திடத்தையும் உலுக்கும் விதமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil