“இதை நினைச்சு வெட்கப்படனும், பெருமைப்பட கூடாது”- நெட்டிசன்களை கோபப்படுத்திய புகைப்படம்

நிபந்தனையற்ற அன்பு இல்லை இது. உதவிக்கு வராத, அன்பற்ற குடும்பத்தினருக்காக சமைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நாம் போற்றவேண்டிய அவசியம் இல்லை. மாறாக கேள்வி தான் எழுப்ப வேண்டும்.

Viral photo of woman cooking while on oxygen support triggers debate online

Viral photo of woman cooking while on oxygen support triggers debate : அம்மாக்களுக்கு வீட்டில் என்றுமே ஓய்வு என்பதே கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மாக்களுக்கு விடுமுறை இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. அவர்களாக விரும்பினாலும் அவர்களுக்கான ஓய்வினை நாம் எப்போதும் தருவதே கிடையாது. இப்படியாக சமூகம் “அம்மா”வின் அனைத்து அபிலாஷைகளையும் பாசம் என்ற பெயரால் தியாகம் செய்ய வைத்திருக்கின்றோம். சமீபமாக ஆக்ஸிஜன் கவசம் மூக்கில் பொருத்திய படி, பெண் ஒருவர் சமைக்கும் புகைப்படத்தை பதிவேற்றி அதில், நிபந்தனையற்ற அன்பு என்றால் அம்மா தான் என்று குறிப்பிடப்பட்டிருந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நமக்கே தெரியும் இது நிபந்தனையற்ற அன்பு இல்லை என்று. உதவிக்கு வராத, அன்பற்ற குடும்ப உறுப்பினர்களின் பசியை போக்க அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நாம் போற்றவேண்டிய அவசியம் இல்லை. மாறாக இப்படியான சூழலில் ஏன் அவ்வீட்டில் இருக்கும் மற்ற யாரும் அப்பெண்ணுக்கு உதவவில்லை என்று தான் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இந்த புகைப்படம் வைரலாக பரவ, சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பொங்கி எழுந்து ட்வீட் பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral photo of woman cooking while on oxygen support triggers debate online

Next Story
கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை – வைரலாகும் புகைப்படங்கள்Viral trending images of world's largest iceberg A-76 that floats in Weddell sea Antarctica
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express