ஒரே ஒரு ஃபோட்டோ... மொத்த ஊரும் இப்ப விராட் - அனுஷ்கா பற்றி தான் பேசுது!

இந்த புகைப்படமும் மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. கூடவே ஏகப்பட்ட விமர்சனங்கள் வேறு.

இந்த புகைப்படமும் மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. கூடவே ஏகப்பட்ட விமர்சனங்கள் வேறு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral photo

viral photo

viral photo : இதுவரை விராட் கோலி -அனுஷ்கா சர்மா பதிவிட்ட அனைத்து புகைப்படங்களும் ஹாட் டாப்பிக்காக தான் மாறியுள்ளது. அந்த வகையில் இந்த புகைப்படமும் அதிலிருந்து தப்பிக்கவில்லை.

Advertisment

காதல் மனைவியை கரம் பிடித்த நாளிலிருந்து வாரத்திற்கு 2 புகைப்படங்களையாவது எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு விடுகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஏற்கனவே இவர் கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்தாமல் மனைவியுடன் அதிக நேரம் செலவிடுவதாக, பயிற்சி நேரங்களில் வெளியில் செல்வதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், கமெண்ட்ஸ்கள் இணையத்தில் உலா வந்தாலும் இந்த ஜோடிகள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாக இல்லை.

ஒருவேளை இதுப் போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் சந்தித்தாலும் அதற்கு கூலாக நோ கமெண்ட்ஸ் என்று முட்டுக்கட்டு போட்டு விடுவார் கோலி. சமீபத்தில் மேற்கிந்திய அணியுடன் டெஸ்ட் தொடர்களில் விளையாட சென்ற போதும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள பீட்களில், ரெஸ்டாரண்டுகளில் அனுஷ்கா சர்மாவுடன் சுற்றி திரிந்தார். அப்போது அதிகளவில் செல்பியும் எடுத்து மகிழ்கிறார். இந்த புகைப்படங்களை அனுஷ்கா உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

விளையாட சென்ற இடத்தில் என்ன வேலை இது? என்ற விமர்சனம் எழாமல் இல்லை. இருந்த போதும் அனுஷ்கா மற்றும் விராட் எதையும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை.இந்நிலையில் மீண்டும் அனுஷ்காவுடன் பிகினி உடையில் ஹாட் செல்பியை பகிர்ந்துள்ளார் விராட். வழக்கம் போல் இந்த புகைப்படமும் மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. கூடவே ஏகப்பட்ட விமர்சனங்கள் வேறு.

Advertisment
Advertisements

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

தங்கள் மீது வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனத்திற்கு இந்த ஜோடிகள் பதில் சொல்வதில்லை.   நெட்டிசன்கள் முன்வைக்கும் விமர்சனத்திற்கு விராட் - அனுஷ்கா ரசிகர்களே தகுந்த பதில்களை தருகின்றனர்.

Virat Kohli Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: