New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/cats-10.jpg)
ராஜேந்திர செமெல்கர் எடுத்த இந்த புகைப்படங்களை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Viral pictures of black spectacled cobras : இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் மூன்று பாம்புகள் கொஞ்சம் கூட அசையாமல் சிலை போலவே இருக்கின்றன. இந்த புகைப்படங்கள் மற்றும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Magical #Melghat Rare sighting of black spectacled cobra.
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) November 20, 2021
Credits: Rajendra Semalkar@jayotibanerjee @ParveenKaswan pic.twitter.com/IULC4MmmET
மகாராஷ்ட்ராவின் ஹரிஷலின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்ட இந்த பாம்புகளை நீலேஷ் வான்கடே என்ற நபர் மெல்காட் புலிகள் காப்பகத்தில் பத்திரமாக கொண்டு சேர்த்தார். காடுகளில் இறக்கிவிடப்பட்ட இந்த பாம்புகள் பிறகு மரத்தின் ஒன்றில் ஒன்றோடு ஒன்று பிண்ணிக் கொண்டன என்று வைல்ட் லென்ஸ் இந்தியா என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த பாம்புகள் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. ராஜேந்திர செமெல்கர் எடுத்த இந்த புகைப்படங்களை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்தும் புகைப்படங்கள் குறித்தும் உங்களின் கருத்து என்ன என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.