chili pepper ice cream roll leaves netizens appalled : ஓரியோ பக்கோடா, ரசகுல்லா சாட்… கேட்கும் போதே ப்ப்பா என்ன மாதிரியான காம்பினேஷன்னு விஜய் சேதுபதி போல கேக்கணும்னு இருக்குல. அந்த வகைல மார்க்கெட்டுக்கு புதுசா வந்துருக்குற சாப்பாட்டு ஐட்டம் தான் ஜன்னத் மிர்ச்சி ஐஸ் க்ரீம் ரோல்.. அதுவாது என்னனா, சாக்லேட், வெணிலா ஃப்ளேவர் மாதிரி ஒரு 100 எம்.எல். மிளகாய் ஐஸ் க்ரீம் சாப்பிட வர்றீங்களா இல்லையான்னு கேள்வி கேக்குறாங்க…
ஸ்பூன்ஸ் ஆஃப் இந்தூர் 2.0 (அப்படா நம்மூர் இல்ல அப்டின்ற மைண்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது) என்ற யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த மிளகாய் ஐஸ்க்ரீம் வீடியோவை இதுவரை 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
முதலில் கொஞ்சம் நறுக்கிய பச்சை மிளகாய், பிறகு கொஞ்சம் நியூட்டெலா பிறகு க்ரீம்… ஃப்ரீசரில் வைத்து ரோல் செய்து எடுத்து மீண்டும் சில மிளகாய் துண்டுகள்.. சூப்பர்ல… இந்த ரெசிபியை யாருக்காச்சும் செஞ்சு கொடுக்க விரும்புனா உடனே இந்த வீடியோவை பாருங்க.. உங்களோட பல நாள் கோபத்தை தீத்துக்க நிச்சயம் உதவியா இருக்கும்.
கொரோனா காலம் என்பதால் பலரும் வீட்டில் அமர்ந்து ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்று விடாமல் யோசித்துக் கொண்டே இருந்ததன் விளைவாக இந்த ஆண்டில் மேகி மில்க்ஷேக், ஓரியோ பக்கோடான்னு பல வெரைட்டிங்க வந்து போக துவங்கின. அதுல இப்போது இந்த ஐட்டம் கொஞ்சம் புதுசு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil