காமராஜுக்கு குரல் கொடுத்த இளம் நடிகை: வைரல் ஆகும் ஸொமட்டோ ஊழியர்

Bollywood actress Parineeti Chopra tamil news: காமராஜ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கான ஆதரவு குரல் வலுத்து வருகிறது.

Bollywood actress Parineeti Chopra tamil news: காமராஜ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கான ஆதரவு குரல் வலுத்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Viral tamil news Bollywood actress Parineeti Chopra supports zomato delivery boy

பெங்களூரில் வசித்து வரும் மேக்கப் கலைஞரும், மாடலுமான ஹிதேஷா சந்திராணி என்பவர், தன்னை ஜொமாட்டோ ஊழியர் காமராஜ் என்பவர் மூக்கில் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். எனவே அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் குரல் எழுப்பினர். இதையடுத்து ஜொமாட்டோ ஊழியர் காமராஜை கைது செய்து விசாரித்த எலக்ட்ரானிக் சிட்டி போலீசார், விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Advertisment

இதற்கிடையில் ஜொமாட்டோ நிறுவனம் காமராஜை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து இருந்தது. இந்த நிலையில், தான் அந்த பெண்ணை தாக்கவில்லை எனவும், அவர்தான் தன்னை தாக்கியதாகவும், மற்றும் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்து, தன்மீது செருப்புகளை வீசி தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜொமாடோவின் நிறுவனர் தீபீந்தர் கோயல் வெளியிட்ட அறிக்கையில், "இந்த சம்பவத்தில் இரு சாராருக்கும் உதவும் வகையில் முடிவெடுக்க முயன்று வருகின்றோம்" என்று தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் ஜொமாட்டோ ஊழியர் காமராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு யார் மீதும் புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏனென்றால் என்னுடைய தந்தை 15 வருடங்களுக்கு முன்னரே தவறி விட்டார். தயார் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனது குடும்பத்தில் நான் ஒருவன் மட்டுமே சம்பாதிக்கிறேன். இந்த வழக்கிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் நண்பர்களே" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

காமராஜ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கான ஆதரவு குரல் வலுத்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து பிரபல பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜொமாட்டோ இந்தியா, தயவு செய்து உண்மையை கண்டுபிடித்து சொல்லவும். அந்த ஜென்டில்மேன் அப்பாவியாக இருந்தால்( அப்பாவி என்று தான் நான் நம்புகிறேன்), தயவு செய்து அந்த பெண்ணை தண்டிக்கவும். இது மனிதாபிமானமற்றது, மற்றும் வெட்கக்கேடானது. என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று தயவு செய்து கூறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Viral Social Media Viral Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: