New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-22T160101.555.jpg)
Midas the cat from Turkey winning the internet with four ears viral news: 4 காதுகளுடன் பிறந்துள்ள மிடாஸ் பூனை தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் கலக்கி வருகிறது.
Viral Tamil News: மரபணு மாற்றத்தால் இரண்டு செட் காதுகளுடன் பிறந்த துருக்கியைச் சேர்ந்த மிடாஸ் என்ற பூனை தற்போது இணையத்தை கலக்கிறது. பிறந்த நான்கு மாதம் ஆனா 'மிடாஸ்' சமூக ஊடகங்களில் 73,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் வலம் வருகிறது.
துருக்கியின் அங்காராவில் ஐந்து உடன்பிறப்புகளுடன் பிறந்தது தான் இந்த இளம் மிடாஸ் பூனை. இந்த கியூட் பூனையை கேனிஸ் டோஸ்மெசி மற்றும் அவரது குடும்பத்தினர் தத்தெடுத்துள்ளனர். அவர்கள் மிடாஸை பார்த்தவுடனே அதன் மீது காதல் கொண்டதாகவும், அதன் தனித்துவமான நிலை காரணமாக ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் தடைபடும் என்ற கவலையில் உடன் அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் ஒரு பூனை வாங்க வேண்டும் என நினைக்கவில்லை. தெருவில் ஆதரவு இல்லாமல் இருக்கும் ஒரு பூனையையே மீட்க வேண்டுமென நினைத்தோம். ஆனால், கடைசியாக மிடாஸை தத்தெடுத்துக்கொண்டோம். " என கேனிஸ் டோஸ்மெசி கூறியுள்ளார்.
ஃபிரிஜியாவின் புராண ராஜாவின் பெயரில் இருந்து வந்ததுதான் மிடாஸ். கழுதைக் காதில் சேணம் போடப்பட்டிருந்தாலும், தொட்ட அனைத்தையும் தங்கமாக மாற்றக்கூடியவர்.
மிடாஸின் தோற்றம் அசாதாரணமாக இருந்தாலும், அவளது உடல்நிலை அல்லது செவித்திறனைப் பாதிக்காது என்று அவரது கால்நடை மருத்துவர் ரெசாட் நூரி அஸ்லான் கூறியுள்ளார். மிடாஸை வேறுபடுத்துவது என்னவென்றால், அவளுடைய நான்கு காது மடல்களும் காது கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
"மிடாஸ் மக்கள் மத்தியில் பிரபலமைடைந்துள்ளதால் செல்லப்பிராணிகளை கடைகளில் வாங்குவதை விட, அவற்றை தத்தெடுக்க விரும்ப முடியும் என்று நம்புகிறோம். மக்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள், அவர்களால் அதை நம்ப முடியவில்லை. எல்லோரும் மிடாஸை பார்க்கவும், அவளுடன் புகைப்படம் எடுக்கவும் விரும்புகிறார்கள்." என்று டோஸ்மெசி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.