நான் ரெடி, நீங்க ரெடியா..? திமுக பிரமுகர் குத்தாட்டம் வைரல்
Palani dmk union councillor dancing for tamil song video goes viral Tamil News: சுற்றுலா தலம் சென்ற பழனி திமுக ஒன்றிய கவுன்சிலர் செம உற்சாகமாக போட்ட நடனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral Tamil News: திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது நண்பர்களுக்குள் நடன போட்டி அரங்கேறி இருக்கிறது. இந்த போட்டியில் அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக நடனமாடி இருக்கின்றனர்.
Advertisment
திமுக ஒன்றிய கவுன்சிலரின் நேரம் வந்தபோது அவருக்கு 'நான் ரெடி, நீங்க ரெடியா?' பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடலுக்கு செம உற்சாகமாக நடனமாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் காரில் இருந்து வெளியே வரும் திமுக ஒன்றிய கவுன்சிலர் 'நான் ரெடி, நீங்க ரெடியா?' செம ஸ்டெப் போடுகிறார். அவரது காரில் திமுக கொடி பறக்கிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள இணைய வாசிகள் அவர் குடிபோதையில் தான் ஆடுகிறார் என்று தெரிவித்து இருகின்றனர்.
திண்டுக்கல் ரீட்டாவின் ஆடலும் பாடலை பின்னுக்கு தள்ளிய 👇👇