Advertisment

டான்ஸ் ஸ்டெப்: பீஸ்ட் நாயகி பூஜாவிடம் பல்பு வாங்கிய சல்மான் கான் வீடியோ

Bollywood star Salman Khan Brutally Trolled by netizens for Jumme Ki Raat Fail with Pooja Hegde Tamil News: நடிகர் விஜயின் பீஸ்ட் பட நாயகி பூஜா உடன் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு, படுபயங்காரமாய் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
Feb 28, 2022 12:49 IST
Viral Tamil News: Salman Khan Brutally Trolled for Jumme Ki Raat Fail with Pooja Hegde

Salman Khan Tamil News: பாலிவுட்டில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பிரபலமாக உள்ள இவர், கடந்த 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இவர் இந்தி சினிமாவில் தனக்கேன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

Advertisment
publive-image

முன்னணி நடிகர்

சல்மான் கானின் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பட வாழ்க்கையில், ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், நடிப்பிற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக இவரை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது. மேலும், உலகின் சிறந்த ஊதியம் பெறும் 100 செலிபிரிட்டி என்டர்டெய்னர்களுக்கான 2015 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இவர் 71வது இடத்தையும், 2018 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் 82வது இடத்தையும் பிடித்து இருந்தார்.

publive-image

ர்ச்சைக்கு பெயர் போன சல்மான்…

2010 ஆம் ஆண்டு முதல் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" ரியாலிட்டி ஷோவை தொகுத்தும், படங்களில் நடித்து வரும் நடிகர் சல்மான் பல சர்ச்சைகளை சந்தித்தவர். 1998ம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கு, 2002ம் ஆண்டு சாலை ஓரத்தில் உறங்கிய மக்கள் மீது வாகனம் மோதிய வழக்கு உட்பட பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது தவிர, அவரின் பல தவறான செயல்களுக்கு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்யப்பட்டு இருக்கிறார்.

publive-image

பீஸ்ட் நாயகியிடம் பல்ப்

இந்நிலையில், அவரின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு, படுபயங்காரமாய் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோ DubaiExpo2020 என்ற விழாவில் பதிவு எடுக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான், அவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கிக் படத்தின் Jumme Ki Raat என்ற பாடலுக்கு பீஸ்ட் பட நாயகியான பூஜா ஹெக்டேவுடன் நடனமாடினார்.

publive-image
publive-image

கிக் படத்தில் வரும் Jumme Ki Raat பாடலுக்கு நாயகி ஜாக்குலின் பெர்னான்டஸ் உடன் சல்மான் கான் நடனமாடி இருப்பார். அதில் மிகச் சிறப்பான ஸ்டெப்ஸ்களையும் அவர் போட்டிருப்பார். பாடலில் ஒரு பகுதியில் அவர் நடிகை ஜாக்குலி அணிந்திருக்கும் ஸ்கர்ட்டை அவரது பல்லால் கடித்துக்கொண்டு ஆடுவது போல் இருக்கும். இதேபோன்று, துபாயில் நடந்த நிகழ்ச்சியிலும் பூஜா ஹெக்டே உடன் ஆட முயற்சி செய்தார் சல்மான். ஆனால், பூஜா அவருக்கு இசைவு கொடுக்காமல் அப்படியே நகர்ந்து சென்றுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வரும் இணைய வாசிகள் சல்மான் கானை பயங்கரமாய் கலாய்த்து வருகின்றனர்.

இந்த வீடியோவுடன் நடிகை திஷா பதானியுடன் சல்மான் நடனமாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், திஷா பதானி- சல்மான் கான் இடையேயுள்ள வயது வித்தியாசத்திற்காக அவரை ட்ரோல் செய்துள்ளனர். சில சல்மான் கான் ரசிகர்கள், அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகியுள்ளது என தெரிவித்துள்ள நிலையில், “சல்மான் திஷா பதானி தந்தையை விட வயதானவராக இருப்பார். இதில் நீங்கள் எந்த கெமிஸ்ட்ரி பற்றி பேசுகிறீர்கள்?" என பங்கம் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Viral Video #Salman Khan #Social Media Viral #Viral #Pooja Hegde #Viral News #Viral Dance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment