New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/1-horz.jpg)
இந்த வயதில் இப்படி ஒரு திறமையா என்று வியக்கிறார்கள் நெட்டிசன்கள்
Trending video of 14 years old mizo girl doing keepy uppy : பொதுவாகவே விளையாட்டு உலகம் என்று வந்துவிட்டால் அதில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை நாம் உணர்வோம். கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் என்று எந்த விளையாட்டும் இதற்கு விதி விலக்கும் அல்ல. பல நேரங்களில் விளையாட விரும்பும் பெண்களுக்கு அவர்களின் வீட்டிலேயே ஆதரவு இருக்காது. இந்நிலையில் கால்பந்து வீராங்கனை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A talented young female football enthusiast Cindy Remruatpuii from my constituency #AizawlEastII playing ball with pencil heel and showing 'How its done'. Football is not just for the boys, its for everyone! #ShePower #IndianFootballForwardTogether pic.twitter.com/1wHfoGwVtL
— Robert Romawia Royte (@robertroyte) June 3, 2021
மிசோரம் மாநிலத்தில் உள்ள ஐஸ்வால் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சிண்டி ரெம்ரௌத்திபுய். இவருடைய விளையாட்டி நுணுக்கங்களில் சிறப்பு என்ன என்று கேட்கின்றீர்களா? கீப்பி - அப்பி (Keepie uppie) என்ற நுட்பம் தான். இந்த விளையாட்டில் கால்பந்தை தரையில் படவிடாமல் கால்கள், முழங்கால், தலை மற்றும் தோள்பட்டைகள் கொண்டு தொடர்ந்து விளையாடி வர வேண்டும். இதனை கால்பந்து ஆடும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இங்கே இவர் கால்களில் ஹை-ஹீல்ஸ் போட்டுக் கொண்டு வெளுத்து வாங்குகிறார். 14 வயது பெண்ணின் இந்த வெறித்தனமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.