New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/E11PTH6VEAkjGIm.jpg)
கடலின் நீர் மட்டம் அதிகரித்து, கடற்கரையோர நகரங்கள் மற்றும் கிராமங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Viral trending images of world's largest iceberg A-76 : மும்பை மாநகரத்தைப் போன்று 7 மடங்கு மிகப்பெரியதாக இருக்கும் பனிப்பாறை ஒன்று உடைந்து தற்போது அன்டார்டிகாவின் உறைந்த பகுதியில் இருந்து உடைந்து வெடெல் (Weddell Sea) கடலில் மிதந்து வருகிறது.
A76 என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை 4320 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. மொத்தமாக 170 கி.மீ நீளமும் 25 கி.மீ அகலமும் கொண்ட இந்த பனிப்பாறை கடலில் மிதந்து வருவதால் பெரும் இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த பனிப்பாறை உடைந்து உருகும் நிலை ஏற்பட்டால் கடலின் நீர் மட்டம் அதிகரித்து, கடற்கரையோர நகரங்கள் மற்றும் கிராமங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 70 ஆண்டுகளுக்கு முன்பு நீருக்குள் மூழ்கிய இத்தாலி கிராமம்; புகைப்பட தொகுப்பு
Copernicus Sentinel-1 செயற்கைக்கோள் சமீபத்தில் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் இந்த பனிப்பாறை உடைவை உறுதி செய்துள்ளது. இந்த பனிப்பாறை உடைவதற்கு முன்பு மிகப்பெரிய பனிப்பாறையாக இருந்தது A23A என்ற பனிப்பாறை. அதன் மொத்த பரப்பு 3880 சதுர கிலோமீட்டர் ஆகும். Sentinel-1 இந்த செயற்கைக் கோள் உலகின் இரண்டு துருவமுனைகளையும் ஆராய்வதற்காக சி பேண்டில் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் துருவமுனைகளின் செயல்பாட்டை இது மேற்பார்வை செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புவியின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் நிறைய பனிப்பாறைகள் உடைந்து மிதந்து இறுதியில் மேலும் உடைந்து கடல் நீர் மட்டத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க : என்னைய பாத்த உங்களுக்கு வெளையாட்டா இருக்கா? ஜே.சி.பி.யிடம் சண்டைக்கு செல்லும் யானை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.